ADDED : நவ 04, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் 11 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்தது.
பிரசார பிரிவு மாவட்ட தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். நகர தலைவர் குமார்தாஸ் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ருத்ரமூர்த்தி, ஊடகப்பிரிவு தலைவர் கந்தசாமி, அயலகபிரிவு தலைவர் கஜேந்திரன், நகர பொதுச்செயலாளர்கள் சசிகுமார், பாலசுப்பிரமணி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர சரவணகுமார், நகர செயலாளர் ஈஸ்வரன், பவுன்ராஜ், மகேந்திரன் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

