UPDATED : அக் 10, 2026 08:02 PM
ADDED : அக் 10, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் மாற்று பஸ் ஏற்பாடு செய்யாததை கண்டித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம் 1:00 மணிக்கு கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு மலை கிராமத்திற்கு செல்ல வேண்டிய அரசு பஸ் பழுதான காரணத்தால் பஸ் ஸ்டாண்டிற்கு வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாற்று ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் மறியலில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்த பஸ்கள் எதுவும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் மாற்று பஸ் ஏற்பாடு செய்த பின்னர் கலைந்து சென்றனர்.
