ADDED : ஏப் 18, 2025 06:42 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரத்த தானத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 500 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் சார்பில் உதிரம் உயர்த்துவோம் என்ற ரத்த தான குழு செயல்பட்டு வருகிறது.
இக்குழுவால் உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் திண்டுக்கல்லில் நடந்தது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு துவங்கிய இதை எம்.பி., சச்சிதானந்தம், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி தொடங்கி வைத்தனர்.இருபாலருக்கும் தனித் தனியே நடந்த மாரத்தானில் திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் கோவை சதீஷ்குமார், ஜெயக்குமார் முதல் 2 இடம், விழுப்புரம் பிரேம்குமார் 3 வது இடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் திருச்சி கீதாஞ்சலி, பொள்ளாச்சி திவ்யா, கோவை மீனாட்சி முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
