ADDED : ஏப் 03, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் என்.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரி, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கல்லுாரி வளாகத்தில் ரத்ததான முகாமை நடத்தியது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் தலைமை வகித்தார்.
என்.பி.ஆர். நர்சிங் கல்லுாரி முதல்வர் மலர்விழி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கரழகு வரவேற்றார். 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
திண்டுக்கல் ரத்ததான வங்கி மருத்துவர் சரண்யா, நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் அஜாம், சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் கலந்து கொண்டனர்.
