ADDED : ஆக 22, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.23-
திண்டுக்கல்லில் 13வது புத்தகத் திருவிழா அக்.,22 முதல் நவ.,1 வரை நடக்க உள்ளது. இதையொட்டி பழநி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் இலக்கிய களம், பொது நுாலக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடந்தது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா நடக்கும் நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி, தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மோகனா, ரமேஷ்குமார், திண்டுக்கல் இலக்கிய கள செயற்குழு உறுப்பினர்கள் பாலச்சந்தர், கோகிலவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
