ADDED : மார் 11, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வார்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் சக்திவேல் தலைமையில் திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா கல்வார்பட்டியில் நடந்தது.
கல்வார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், வி.புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.
குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் மாணவர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
சுப்பிரமணி, செல்வம், பூலோகம், ராமன் பங்கேற்றனர். கல்வார்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

