ADDED : நவ 16, 2025 04:02 AM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி: -சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் 24. இவர் கடந்த அக்.27 ல் அவர் வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த டூ வீலரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., ஆதாரங்களின் அடிப்படையில் 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவனை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
