தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்கம்பி உரசியதில் உடல் கருகி சிறுவன் பலி

 மின்கம்பி உரசியதில் உடல் கருகி சிறுவன் பலி

 மின்கம்பி உரசியதில் உடல் கருகி சிறுவன் பலி


ADDED : செப் 19, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் 45. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் வாங்கி வந்து சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்து வருகிறார்.

நேற்று காலை டிரைவர் தினேஷ்குமார் தஞ்சாவூரில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு சாணார் பட்டி அருகே எல்லப்பட்டிக்கு வந்து லாரியை நிறுத்தினார்.

கணேசனின் மகன் பெரியகருப்பன் 15, வைக்கோலை மூடி வைத்திருந்த தார்பாயை அகற்ற லாரி மீது ஏறினார்.

லாரி நின்றிருந்த பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பி அவர் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்ததில் பெரியகருப்பன் உடல் கருகி பலியானார்.

வைக்கோலும் தீப்பற்றி எரிய துவங்கியது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர்.

தகவ லறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us