ADDED : ஜன 07, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை:
திருப்பரங்குன்றம் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சி, அரசியல் அமைப்பு மதிப்புகள், பொதுநல கோட்பாடுகளை வலுவாக நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
இது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு முக்கியமான முன் உதாரணம்.
இந்த தீர்ப்பு, பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை, தமிழக அரசு முழுமையாக சீரான பார்வையுடன் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

