ADDED : மே 23, 2026 03:19 AM
பழநி: தமிழக அரசில் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் தலைவர் ஹரிஹர முத்தய்யர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மாநிலத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான நன்மை செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும். சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம், கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
புதிய அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்கள் நலனுக்காக செயல்பட்டு தமிழ்நாட்டை மேலும் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, அவர்களின் முயற்சிகள் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைய வேண்டும். புதிய அமைச்சர்களின் சேவைகள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பெறும் பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
