ADDED : பிப் 17, 2026 07:01 AM

அ நிறம் | அளவு
இடையகோட்டை: இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயில் மகாசிவராத்திரி உற்ஸவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி னர்.
இடையகோட்டை வலையபட்டியில் ராயர் குலவம்சம் குரும்பா கவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நான்கு நாட்கள் கொண்டாடப் படுவது வழக்கம்.
இந்தாண்டு விழா முதல் நாளன்று குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது.
இரண்டாம் நாளான நேற்று பரம்பரை யாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைக்க வரம் கேட்பவர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது.
நேற்று 30க்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
