/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆணி படுக்கையில் யோகாசனம்: சாதித்த பி.ஆர்.ஜி.,பள்ளி மாணவர்
/
ஆணி படுக்கையில் யோகாசனம்: சாதித்த பி.ஆர்.ஜி.,பள்ளி மாணவர்
ஆணி படுக்கையில் யோகாசனம்: சாதித்த பி.ஆர்.ஜி.,பள்ளி மாணவர்
ஆணி படுக்கையில் யோகாசனம்: சாதித்த பி.ஆர்.ஜி.,பள்ளி மாணவர்
ADDED : நவ 10, 2025 01:03 AM

நெய்க்காரபட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் 2700 ஆணிகள் கொண்ட படுக்கையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் யோகாசனம் செய்து சாதனை புரிந்துள்ளார்.
பழநி பகுதியில் ஓட்டல் நடத்திவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி, திருச்செல்வி தம்பதியர் மகன் நகுலன் 13.
இவர் பழநி நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் யோகாசனங்களில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார். நேற்று 2700 ஆணிகள் கொண்ட படுக்கையில் பத்மாசனம், யோக முத்ராசனம், பட்சி முக்தாசனம், கும்ப வர்த்தாசனம், நின்ற பருவதாசனம், பக்த பிறையாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்தார்.
இதனை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தினர் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர். மாணவரை பள்ளி தாளாளர் ரஞ்சிதம், செயலர் கிரிநாத், நிர்வாக குழு உறுப்பினர் பவிதா ஆசிரியர்கள் பாராட்டினர்.

