/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தார்ரோடு பணியின் போது இடிந்து விழுந்த பாலம் பாலம் அமைக்காமல் ரோடு அமைப்பதாக குற்றச்சாட்டு

ADDED : டிச 04, 2025 05:49 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டியிலிருந்து கிழக்கு மாத்தினிபட்டி செல்லும் ரோடு தார் ரோடாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதன் அருகே உள்ள பாலம் இடிந்து விழுந்தது.
வேடசந்துார் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டியில் இருந்து கிழக்கு மாத்தினிபட்டி சொல்லும் மெட்டல் ரோடு மூன்று பாலங்களுடன் 1.2 கி.மீ., நீளம் கொண்டது. இந்த ரோடை 20 ஆண்டுகளாக புதுப்பிக்க வில்லை. தற்போது தார் ரோடாக மாற்றி அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ரோட்டின் மையப் பகுதியில் மணியக்காரன் குளத்திற்கு செல்லும் சிற்றோடை காங்கிரீட் பாலம் இடிந்து விழுந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு தார் ரோடு அமைக்கக்கூடிய இந்த ரோட்டில் சேதமான பாலங்களை புதுப்பிக்க கோரி கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒன்றிய பொறியாளர் பாலனிடம் கேட்டபோது,'' பாலங்களை ரோடு அமைப்பதற்கான எஸ்டிமேட்டில் சேர்க்கவில்லை. தற்போது ஒரு பாலம் உடைந்ததால் மீதம் உள்ள மூன்று பாலங்களையும் புதுப்பிக்க தனியாக எஸ்டிமேட் தயாரித்து அனுப்ப உள்ளோம்'' என்றார்.
3 பாலங்கள் உள்ள ஒரு ரோட்டில் நீண்ட காலத்திற்குப் பிறகு தாரோடு அமைக்கும் நிலையில் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டாமா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.