தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பாலம் உடைந்து தெருவில் தேங்கும் கழிவுநீரால் அவதி

பாலம் உடைந்து தெருவில் தேங்கும் கழிவுநீரால் அவதி

பாலம் உடைந்து தெருவில் தேங்கும் கழிவுநீரால் அவதி


UPDATED : அக் 18, 2026 03:20 PM

ADDED : அக் 18, 2026 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 03:20 PM ADDED : அக் 18, 2026 03:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை பிலாத்தில் பாலம் சிதைந்து அடைப்பட்டதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருக்களிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

பிலாத்தில் தென்னம்பட்டி ரோட்டில் மந்தைக்குளம் வளைவு பகுதியில் இருந்த கல் பாலம் சிதைந்தது. ஊராட்சி சார்பில் குறுகிய விட்டம் கொண்ட குழாய் பதித்து நீர் வெளியேற தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கனரக வாகனங்களால் அந்த கட்டமைப்பும் சிதைந்து பாலம் அடைப்பட்டுள்ளது.

இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டை கடக்க வழியின்றி வடிகால்களிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியும் மிதமிஞ்சிய அளவில் காணப்படுகிறது. இதனால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

இங்கு கழிவுநீர் ரோட்டை கடக்க உடனடியாக வழி செய்வதுடன், நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலமும் கட்டுவது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us