/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலம் கட்டும் பணி: இரும்பு தகடுகள் திருடிய ஐவர் கைது
/
பாலம் கட்டும் பணி: இரும்பு தகடுகள் திருடிய ஐவர் கைது
பாலம் கட்டும் பணி: இரும்பு தகடுகள் திருடிய ஐவர் கைது
பாலம் கட்டும் பணி: இரும்பு தகடுகள் திருடிய ஐவர் கைது
ADDED : நவ 28, 2024 06:11 AM
வேடசந்துார்: ஆத்துப்பட்டியில் பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள இரும்பு தகடுகளை திருடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிமிருந்த வேன், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டியில் குடகனாற்றின் குறுக்கே ரூ.7.50 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பணிக்காக சென்ட்ரிங் தகடுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான 90 இரும்பு தகடுகளை திருடி சென்றனர். வேடசந்துார் டி.எஸ்.பி., இலக்கியா தலைமையிலான தனிப்படை போலீசார் சி.சி.டிவி., கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சாலையூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சரக்கு வாகனத்தில் கான்கிரீட் போடுவதற்காக இரும்பு தகடுகள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதன் பின்னால் வந்த காரையும் நிறுத்தி விசாரித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முருகன் 33,தண்டபாணி 35, சூர்யா 23, சேட்டு 28,
கிருஷ்ணகிரி சூர்யா 23, என்பதும் இவர்கள்தான் இரும்பு தகடுகளை திருடியது தெரிய வர 5 பேரையும் கைது செய்து 90 இரும்பு தகடுகளையும் பறிமுதல் செய்தனர். இதோடு வேன், காரையும் பறிமுதல் செய்தனர்.