ADDED : மார் 26, 2026 08:03 PM
திண்டுக்கல்:சென்னை கோவளம் கடற்கரையில் மார்ச் 20 முதல் 23 வரை முதல் கடற்கரை தைஜிகுவான் சீனியர் ,ஜூனியர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. சீனா துாதரக முதல் செயலாளர் ஷாங்க்ஹாலின் துவக்கி வைத்தார். சீன துாதரகத்தின் அமைச்சக ஆலோசகர் வாங்க்ஜின்மிங் பங்கேற்றார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 115 வீரர்கள், 85 வீராங்கனைகள் பங்கேற்றனர் . திண்டுக்கல் வீராங்கனை ரோஹிதா, தாய்ஜிகுவான் பிரிவில் வெண்கலப் பதக்கம், தாய்ஜிஷான் பிரிவில் கூடுதல் வெண்கலப் பதக்கம் வென்றார். திண்டுக்கல் திரும்பிய ரோஹிதாவிற்கு மாவட்ட வூஷூ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஹிதாவை பயிற்சியாளர் ஜாக்கிசங்கர், கோவளம் கடற்கரை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் பாராட்டினர்.
