ADDED : ஆக 16, 2026 11:17 PM

அ நிறம் | அளவு
அம்பிளிக்கை: சிக்கன் ரைஸ் தகராறில், ஜெகதீசன், 19, என்பவரை, குத்தி கொன்ற அவரது அண்ணன் ஜீவானந்தம், 24, கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சேசபுரம் காலனியை சேர்ந்த சுரேஷ் மகன்கள் ஜீவானந்தம், ஜெகதீசன். ஆக., 10 இரவு, ஜீவானந்தம் மதுபோதையில் வீட்டிற்கு சென்றார். அவர் வாங்கி வைத்திருந்த சிக்கன் ரைசை, ஜெகதீசன் சாப்பிட்டுள்ளார்.
இதில், ஏற்பட்ட தகராறில், ஜெகதீசனின் வயிற்றில் கத்தியால் ஜீவானந்தம் குத்தினார். திண்டுக்கல் ஜி.ஹெச்.,சில் சேர்க்கப்பட்ட ஜெகதீசன், நேற்று மதியம் உயிரிழந்தார். அம்பிளிக்கை போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
