/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 13, 2025 12:59 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் 37ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரித்தலைவர் தனலட்சுமி, முதன்மை தலைவர் ரகுராம் தலைமை வகித்தனர். அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தலைவர் சீதாராம், சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப பகுப்பாய்வு பிரிவு தலைவர் மகேஷ் பஞ்சக்னுலா பேசினர்.
செயற்கை நுண்ணறிவு தகவல் அறிவியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பவியல் பிரிவுகளை சேர்ந்த 240 மாணவர்களுக்கு சீதாராம் பட்டங்கள் வழங்கி பேசினார். அவர் பேசியது:
தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா மற்ற நாடுகளை விடவும் சிறந்து விளங்குகிறது. விண்வெளித்துறையில் முதல் முயற்சியில் பல விஷயங்களை சாதித்து தனது தொழில்நுட்ப பலத்தை நிரூபித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு சாதனங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்தது. தற்போது 65 நாடுகளுக்கு பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக திகழ்கிறது. பல விஷயங்களிலும் இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்கின்றன என்றார்.
அறங்காவலர் சூர்யா ரகுராம், முதல்வர் வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.