ADDED : மார் 19, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை, : புதுப்பட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பட்ஜெட் விளக்க பிரசாரக் கூட்டம் நடந்தது தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், அம்மையநாயக்கனுார் பேரூராட்சி செயலாளர் விஜயகுமார், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினிபிரியா முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி செயலாளர் ஜோசப்கோவில்பிள்ளை வரவேற்றார். தி.மு.க., பேச்சாளர் பவானி கண்ணன் ஒன்றிய பொறுப்பாளர்கள் அழகர்சாமி, நெடுமாறன், வெள்ளிமலை பங்கேற்றனர். 11-வது வார்டு செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

