/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 21, 2025 02:30 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் மாநில மேலாண்மை, பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.
திண்டுக்கல்லில், அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மேலாண்மை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் கர்ணபூபதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலேசிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களின் இருந்து வந்திருந்தவர்கள் கருத்துக்கள் எடுத்துரைத்தனர். கிரசர், ஜல்லிக்கல் விலை, அனுமதிச் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலைவாசியை பொறுத்து ஒப்பந்தத்தை தீர்மானிக்க வேண்டும், அரசு ஒப்பந்தப்பணிகளுக்கான 18 சதவீதம் ஜி.எஸ்.டி., உயர்வை நிறுத்தவேண்டும், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இணை தலைவர்கள் முகம்மது அப்துல்காதர், மீனாட்சி சுந்தரம், வீரமார்பன், விழாக்குழு தலைவர் ஜனகர், மையத்தலைவர் பவுல்ராஜ், வரவேற்பு குழு நிர்வாகி பூபேஷ், விடுதிக்குழுத்தலைவர் உதயக்குமார், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் மோகன், முன்னாள் தலைவர் தர்மலிங்கம், மாநில கால்பந்து கழகத்தலைவர் சண்முகம், இன்ஜினியர் பாலசந்தர், இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் நடராஜன், சிவபாலாஜி ஸ்டீல்ஸ் சிவா, அருணா சேம்பர்ஸ் மணிகண்டன், தேவர் புளுமெட்டல்ஸ் ரமேஷ், யுனிவர்சல் பைப்ஸ் பாசித், சபிதா அன்கோ சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.