/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
/
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
ADDED : ஜன 08, 2026 06:06 AM

நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வளர்த்து வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துார் ஹைகோர்ட் பத்ர காளியம்மன் கோயில் திடலில் ஜன.17 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து தகுதி உள்ள காளைகள் வருகின்றன.
நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்துார் பகுதியில் தமிழக முழுவதும் நடைபெறும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பலர் காளைகளில் வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், மண்ணைக் குத்துதல், பாய்தல், துள்ளி குதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு பேரிச்சம்பழம், பருத்தி விதை, தவிடு, தீவனங்கள் தேவையான அளவு வழங்கி திடகாத்திரமாக வளர்த்து வருகின்றனர்.

