ADDED : ஆக 31, 2026 01:07 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னக்குளம் ரோட்டில் குப்பை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து சின்னக்குளம் வழியாக நாகணம்பட்டிக்கு தார் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் குளக்கரை பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இவை மக்கும், மக்காத குப்பையாக பிரிக்கப் படாமல் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இவற்றில் இருந்து கிளம்பும் கரும்புகையால் ரோடு முற்றிலும் மறைக்கப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
இப்பகுதியில் குப்பையை கொட்டாமல் இருக்கவும் முறையாக அப்புறப்படுத்தவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
