/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகாரிகள் மீது மோத முயன்ற பஸ் பறிமுதல் ரூ.ஒரு லட்சம் அபராதம்
/
அதிகாரிகள் மீது மோத முயன்ற பஸ் பறிமுதல் ரூ.ஒரு லட்சம் அபராதம்
அதிகாரிகள் மீது மோத முயன்ற பஸ் பறிமுதல் ரூ.ஒரு லட்சம் அபராதம்
அதிகாரிகள் மீது மோத முயன்ற பஸ் பறிமுதல் ரூ.ஒரு லட்சம் அபராதம்
ADDED : டிச 28, 2024 06:20 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனுாருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக சென்ற திண்டுக்கல் வந்த தனியார் பஸ்சை மடக்கிய போக்குவரத்து அதிகாரிகள் மீது மோத வந்த பஸ்சை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் டு மதுரை, மதுரை டு திண்டுக்கல்லுக்கு பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள்
கொடைரோடு அருகே உள்ள அம்மைநாயக்கனுாருக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வர வேண்டும். ஆனால் சில பஸ்கள் அதிக டிரிப்களை அடிக்க வேண்டும் என்பதற்காக அம்மையநாயக்கனுாருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல்,மதுரை செல்கின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க அனைத்து பஸ்களும் உள்ளே சென்று வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை கண்காணிக்க நேற்று வட்டார போக்குவரத்து கழக பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அம்மையநாயக்கனுார் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளுடன் வந்த தனியார் பஸ் அம்மையநாயக்கனுாருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல் வர முயன்றது. போக்குவரத்து அதிகாரிகள் அந்த பஸ்சை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர்.
அப்போது டிரைவர் அதிகாரிகள் மீது மோதுவது போல் பஸ்சை இயக்கி திண்டுக்கல் நோக்கி சென்றார். 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு பஸ்சை விரட்டி சென்ற போக்குவரத்து அதிகாரிகள் நடுரோட்டில் மடக்கினர். பஸ்சை பறிமுதல் செய்த அவர்கள் அம்மைநாயக்கனுார் போலீசில் ஒப்படைத்தனர். பஸ் உரிமையாளருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

