ADDED : அக் 30, 2024 04:59 AM

அ நிறம் | அளவு
வேடசந்துார், : வேடசந்தூர் சென்ற அரசு பஸ் மீது பறந்து வந்த மயில் முன்புற கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி உடைந்து சிதறியதோடு மயிலும் இறந்தது.
திண்டுக்கல்லிருந்து வேடசந்தூர் நோக்கி தனியார் பஸ் சென்றது. டிரைவர் கார்த்தி ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.
வேடசந்தூர் காக்காத்தோப்பு பிரிவை கடந்தபோது 2 வயது பெண் மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்புற கண்ணாடியில் மோதியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் மயிலும் இறந்தது. பதறிப்போன டிரைவர், கண்டக்டர், பயணிகளை இறக்கி வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
