/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாததால் பாதிப்பு !நடத்துனர்கள் அலட்சியத்தால் முதியோர், பெண்கள் பரிதவிப்பு
/
பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாததால் பாதிப்பு !நடத்துனர்கள் அலட்சியத்தால் முதியோர், பெண்கள் பரிதவிப்பு
பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாததால் பாதிப்பு !நடத்துனர்கள் அலட்சியத்தால் முதியோர், பெண்கள் பரிதவிப்பு
பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாததால் பாதிப்பு !நடத்துனர்கள் அலட்சியத்தால் முதியோர், பெண்கள் பரிதவிப்பு
UPDATED : ஜன 06, 2026 10:08 PM
ADDED : ஜன 06, 2026 06:06 AM

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழநி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாயின்ட் டூ பாயின்ட் சர்வீஸ் போல் பஸ் கடைசியாக செல்லும் ஊர் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து முதன் முதலில் பஸ்சில் ஏற சொல்வதால் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திண்டுக்கல் பழநியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தனியார், அரசு பஸ்கள் இயக்கப்பட்ட வருகின்றன. வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இவற்றில் சில பஸ்கள் இயக்கப்படுவதால் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து பழநிக்கு செல்லும் தனியார் , சில அரசு பஸ்களில் முதலில் பழநிக்கு செல்லும் பயணிகளையே ஏற சொல்கின்றனர். இடைப்பட்ட ஊர்களான ரெட்டியார்சத்திரம் ,ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளை பஸ் கிளம்பும்போது ஏறிக்கொள்ள சொல்கின்றனர். விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள், குறிப்பிட்ட சில நாட்களில் பஸ் கிளம்பும்போதே இருக்கைகள் நிரம்பி விடுகிறது. இதனால் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்வதற்கு காத்திருந்து பஸ் ஏறும் பயணிகள் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண் பயணிகள் ,முதியோர்கள் ,குழந்தைகள் உடல்நிலை சரியில்லாதவர்கள் என பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு சில இருக்கைகளை ஒதுக்கி அவர்களும் அமர்ந்து பயணம் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.
...........
நடவடிக்கை தேவை
திண்டுக்கல், பழநி மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் இடைப்பட்ட ஊர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் அமர்ந்து செல்வதற்கு இடம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது தொடர்கிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் , வார விடுமுறை நாட்கள், பள்ளி, கல்லுாரி விடுமுறை நாட்களில் இதே நிலை நீடிக்கிறது. கோவையிலிருந்து மதுரை , தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் ஒட்டன்சத்திரம் செல்லும் பயணிகளை முதலில் ஏற்றுவது கிடையாது. திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் பஸ்களிலும் இதே நிலைதான். பஸ் பெர்மிட் வாங்கும்போது பல ஊர்களுக்கு ஸ்டாப்பிங் போட்டு வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அந்தந்த ஊர் பயணிகள் நலனில் சிறிதும் அக்கறை காட்டுவது இல்லை. வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஒரு சில பஸ்கள் தொலைதுாரப் பயணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொடுப்பதில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.எஸ். சுரேஷ்குமார், தலைவர், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன், ஒட்டன்சத்திரம்.
...........

