/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்கள்; வெயிலில் தவிக்கும் மக்கள்
/
பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்கள்; வெயிலில் தவிக்கும் மக்கள்
பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்கள்; வெயிலில் தவிக்கும் மக்கள்
பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்கள்; வெயிலில் தவிக்கும் மக்கள்
ADDED : நவ 05, 2025 12:55 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் உள்ளே ரூட் பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை வசதியை ஏற்படுத்த , பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கு ஜிலி யம்பாறை பகுதியில் அரசு, தனியார் டவுன் பஸ், ரூட் பஸ்கள் வந்து செல்கின்றன. குஜிலியம்பாறையில் தாலுகா அலுவலகம், ஒன்றிய, பத்திரப்பதிவு, வங்கிகள், வேளாண், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ள நிலையில் தாலுகா பகுதியை சேர்ந்த கூடுதலான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதுமட்டு மின்றி திண்டுக்கல் கரூர் வழித்தடத்தில் பல்வேறு கிராமம், நகர் பகுதிகளுக்கு செல்லும் மக்களும் கூடுதலாக செல்கின்றனர். கரூர் திண்டுக்கல் 80 கி.மீ., துாரத்திற்கு அனைத்து ஸ்டாப்களிலும் நின்று செல்லும் தனியார், அரசு பஸ்கள் 2 மணி நேரம் செல்லும் நிலையில் இடைப்பட்ட தூரத்தில் உள்ள குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் நின்று செல்லலாம்.
இன் றைய காலகட்டத்தில் வயதானவர்கள் பலர் நீரழிவு பாதிப்பிற்கு ஆளான நிலையில் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நின்று சென்றால் , அங்குள்ள பாத்ரூமில் சிறுநீர் கழித்து செல்லலாம். கடைகளில் டீ காபி ,தண்ணீர் குடித்து செல்லலாம்.
ஆனால் இது எதற்கும் வழியில்லாத நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் ரூட் பஸ்கள் செல்வதில்லை. இதனால் வயோதிகர்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அலுவலக விசயமாக வந்து செல்லும் மக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து ரூட் பஸ்சில் செல்வதற்காக வெயிலில் காத்து நிற்கின்றனர்.
குஜி லியம்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்லும் மக்களும் வெயிலில் காத்து கிடக்கின்றனர். நிழற்குடை வசதி கூட அங்கு இல்லை. இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் வகையில் போதிய முன்னேற் பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
பய ணி கள் அவதி ப.இளவரசன், சமூக ஆர்வலர், குஜிலியம்பாறை: நீண்ட காலமாக குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டில் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகளும் அவதிக்கு ஆளாகின்றனர்.
திண்டுக்கல், வேடசந்துார், கரூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் வேடசந்தூர், பள்ளபட்டி, அரவக்குறிச்சி என பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று சிறிது நேர ஓய்வுக்குப் பின் செல்கின்றன. ஆனால் குஜிலியம்பாறை, கரூர் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் இங்கு நிற்பதில்லை.
நடவடிக்கை இல்லை ஜி.எஸ்.வீரப்பன், தமிழர் தேசிய முன்னணி, மாநில துணைத்தலைவர், குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் உள்ளே செல்லாதது குறித்து கலெக்டரிடம் இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தேன். பஸ் ஸ்டாண்டுக்குள் ஏன் பஸ்கள் செல்வதில்லை என கேட்டார். இதே நிலை நீண்ட காலமாக உள்ளது என்றேன். பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். னால் எந்த நடவடிக்கையும் இல்லை.

