ADDED : மார் 13, 2024 12:09 AM

வடமதுரை : வடமதுரையில் கொளுத்தும் வெயிலால் கருகி கிடக்கும் புல், புதர் காடுகள் ஆங்காங்கே தீயில் எரிந்து நாசமாகின்றன.
வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் ஆண்டிமாநகர், சிக்காளிப்பட்டி பிரிவு குதிகளில் புல், புதர் செடிகள் பெருமளவில் வளர்ந்திருந்தன. வெயிலால் காய்ந்து கிடக்க யாரோ வைத்த தீ புதர் பகுதியில் பற்றி பல மீட்டர் தொலைவிற்கு எரிந்தது.
இதே போல் நேற்று மாலை திருச்சி ரோட்டில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ ஏக்கர் கணக்கில் பரவி எரிந்தது. தீயால் ஏற்படும் புகை சாலை முழுவதுமாக மறைக்கும் வகையில் உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளது.
-விவசாயிகளே உஷார்
-தற்போது தென்னை, மா, சப்போட்டா போன்ற மர வகைகளின் இலைகள் வறட்சியால் காய்ந்துள்ளன. இவற்றிற்கு அடியில் இருக்கும் புல், புதர்களும் காய்ந்து உள்ளன. இந்நிலையில் தோட்டத்தில் எங்காவது ஒரு பகுதியில் தீப்பற்றினாலும் பரவி தோட்டத்தையே நாசம் செய்துவிடும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் 2018 ல் வடமதுரை பகுதியில் நடந்தன. விவசாயிகள் மரங்களை சுற்றி காய்ந்துபோன புல், புதர் , மரங்களின் காய்ந்த பாகங்களை அகற்றுவது நல்லது.
