ADDED : மார் 19, 2026 05:05 AM

வடமதுரை, மார்ச் 19--
கொளுத்தும் வெயிலால் வடமதுரையில் கருகி கிடக்கும் புதர் தீயில் எரிந்தன.
வடமதுரை திருச்சி ரோட்டோரம் பெருமளவில் வளர்ந்திருந்த புல் புதர்கள் கோடை வெயிலாால் காய்ந்து கிடந்தன. இப்பகுதியில் யாரோ வீசி சென்ற தீயால் தீப்பற்றியது. அருகில் இருந்த விளை நிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்கு பின் நில உரிமையாளர்கள் அணைத்தனர்.
தென்னை, மா, சப்போட்டா போன்ற மர வகைகளின் இலைகள் வறட்சியால் காய்ந்துள்ளன. இவற்றிற்கு அடியில் இருக்கும் புல் புதர்களும் காய்ந்து கருகி உள்ளதால் தோட்டத்தில் எங்காவது ஒரு பகுதியில் தீப்பற்றினாலும் மளமளவென பரவி தோட்டத்தையே சேதம் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் முன்பு விவசாயிகள் மரங்களை சுற்றிய காய்ந்துபோன புல் புதர் , மரங்களின் காய்ந்த பாகங்களை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
