/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வியாபாரியை தாக்கி நகை பணம் கொள்ளை
/
வியாபாரியை தாக்கி நகை பணம் கொள்ளை
ADDED : ஜூலை 19, 2025 02:48 AM
நத்தம்: நத்தம் அருகே வியாபாரியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
பரளி - தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் 31.மதுரை மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தேங்காய்களை மொத்தமாக வாங்கியும் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று ராஜாங்கம் தனது டூவீலரில் தேங்காய் வெட்டு கூலி கொடுப்பதற்காக வத்திபட்டி ஏ.டி.எம்.,க்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். வத்திபட்டி பேட்டைக்குளம் பகுதியில் சென்ற போது லிங்கவாடியை சேர்ந்த மாதேஷ், திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் ,ரெட்டியபட்டியை சேர்ந்த தவம் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ரூ.10 ஆயிரம் , அலைபேசியை பறித்து விட்டு தப்பினர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.