தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 07, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் செய்தி குறிப்பு : ஆத்துார், வத்தலக்குண்டு உட்பட 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு பிப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் , 3 மாதங்கள் எம்.எஸ்., ஆபீஸ் கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 30 வயது உட்பட்டவர்கள் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காலிப் பணியிடம் உள்ள வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல்- 624 004 க்கு பிப்.16 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0451- - 2460 050 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us