ADDED : ஏப் 15, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 2026--- 2027ம் ஆண்டிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஆண், பெண் இருபாலருக்கும் 30 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உணவு, தங்கும் இடம் இலவசம்.
ஆண்களுக்கான செல்போன் பழுது நீக்கும் பயிற்சி மே 4ல் துவங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் ரேஷன், ஆதார், கல்விச்சான்றிதழ், 3 போட்டோ ஆகியவற்றுடன் நத்தம் சாலை சிறுமலைப்பிரிவு அருகே உள்ள பயிற்சி மையத்தை அணுகலாம்.
