UPDATED : ஜூன் 04, 2026 03:56 PM
ADDED : ஜூன் 04, 2026 03:50 PM
திண்டுக்கல்:முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு 2024 முதல் - 2026 வரையிலான நிதி ஆண்டுகளில் 400 பயனாளிகளுக்கு 30 சதவீத மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்பட்டது. பிப்.23ல் வெளியான அரசாணையில் இத்திட்டம் 2026-- 27 நிதி ஆண்டிற்கு நீட்டிப்பு செய்து 200 பயனாளிகளுக்கு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொழில்முனைவோர் பயிற்சி நிறைவு செய்து காத்திருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆகியோருக்கு தொழில் முனைவோர் பயிற்சியானது சென்னையில் நேரடிப் பயிற்சியாக நடைபெறும். பயிற்சி பெற விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
