தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தபால்துறை முகவராக அழைப்பு

தபால்துறை முகவராக அழைப்பு

தபால்துறை முகவராக அழைப்பு


UPDATED : ஜூன் 08, 2026 07:56 PM

ADDED : ஜூன் 08, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 07:56 PM ADDED : ஜூன் 08, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:''திண்டுக்கல் தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு நேரடி வணிக முகவராக செயல்பட விண்ணப்பிக்கலாம்'' என முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசராவ் தெரிவித்து உள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு நேரடி வணிக முகவராக செயல்பட 18 வயதிற்கு மேற்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். கல்லுாரி மாணவர்கள் படித்து கொண்டே நேரடி முகவராக செயல்பட்டு ஊக்கத்தொகை பெறுவதற்கு இது நல்வாய்ப்பு.

விண்ணப்பங்களை அருகில் உள்ள தலைமை, துணை தபால் அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து 'முதுநிலை தபால் கோட்டக்கண்காணிப்பாளர், திண்டுக்கல் தபால் கோட்டம், திண்டுக்கல் - 624 001க்கு ஜூன் 23க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.ஜூன் 25 மதியம் 11:00 மணிக்கு திண்டுக்கல் முதுநிலை தபால்துறை கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு வளர்ச்சி அலுவலரை 96291 36397 ல் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us