/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு
/
திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு
ADDED : செப் 12, 2025 04:37 AM
திண்டுக்கல்: கட்டுமான தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுப் பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் 7 நாட்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
12 தொழில் பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி சான்றிதழுடன் நாளொன்றுக்கு ரூ.800 வீதம் உதவித்தொகை ,மதிய உணவு வழங்கப்படும்.
முதற்கட்டமாக செப்.15 முதல் ஒருவார கால பயிற்சி முதல் அணி தொடங்கப்பட உள்ளது. திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்வோர் நலவாரியஅட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் , குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), தரைத்தளம்,ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.