தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மானியத்தில் சிறிய பதப்படுத்தும் நிலையம் அமைக்க அழைப்பு

மானியத்தில் சிறிய பதப்படுத்தும் நிலையம் அமைக்க அழைப்பு

மானியத்தில் சிறிய பதப்படுத்தும் நிலையம் அமைக்க அழைப்பு


ADDED : செப் 20, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் சிறிய அளவிலான பதப்படுத்தும் நிலையம் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பதப்படுத்தும் நிலையம் அமைக்க இலக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை சார்ந்த விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டவும், பதப்படுத்தவும் சிறிய அளவிலான பதப்படுத்தும் நிலையம் தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். சிறிய அளவிலான பதப்படுத்தும் நிலையம் அமைப்பதற்கு 35 சதவீத பின்னேற்பு மானியம், அதிகபட்சம் ரூ.12.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. வங்கி கடனுதவி பெற்றும் இத்திட்டத்தில் பயனடையலாம். திட்ட நெறிமுறைகளின்படி இதர இனங்களுடன் இணைத்து சிறிய அளவிலான பதப்படுத்தும் நிலையம் அமைத்திட வேண்டும். எனவே பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதலில் ஆர்வமுள்ள வத்தலக்குண்டு வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us