ADDED : மார் 30, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை:நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தேன்மொழி எம்.எல்.ஏ., தெருமுனை பிரசாரங்களில் ஈடுபட்டு தேர்தல் அறிக்கை சம்பந்தப்பட்ட நோட்டீசுகளை வழங்கினார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை பகுதி முக்கிய நிர்வாகிகள், கிராமத்து முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதேபோல் தி.மு.க., வேட்பாளர் நாகஜோதி வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கொடைரோடு பகுதி ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
