sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை  அமோகம்: இளைஞர்கள்,மாணவர்கள் பாதிப்பு

/

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை  அமோகம்: இளைஞர்கள்,மாணவர்கள் பாதிப்பு

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை  அமோகம்: இளைஞர்கள்,மாணவர்கள் பாதிப்பு

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை  அமோகம்: இளைஞர்கள்,மாணவர்கள் பாதிப்பு

3


ADDED : ஜன 29, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:44 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ரயில், பார்சல் சர்வீஸ், பயணிகளாக வருபவர்களால் கிலோ கணக்கில் கஞ்சா பார்சல்கள் கொண்டுவரப்படுகிறது.

இதில் பெரும்பாலும் ஆந்திரா, பீஹார் மாநிலங்களில் இருந்து ரயில்கள் வழியாக பொதுப்பெட்டிகளில் மறைத்து வைத்து கொண்டு வரப்படுகிறது. மதுரை மாவட்ட எல்கை பகுதிகளில் இருந்து சர்வசாதாரணமாக கஞ்சா டூவீலர்களில் கடத்தப்படுகிறது.

இப்படி கடத்தி வரப்படும் கஞ்சா பார்சல்கள் 10 கிராம் முதல் 40 கிராம் வரையான பொட்டலங்களாக்கி விற்பனை செய்வது படுஜோராக நடக்கிறது. போலீசார் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் கடத்தல், விற்பனை நின்றபாடில்லை.

சிறையில் இருந்து கொண்டே வெளியே இருக்கும் கூட்டாளிகளின் உதவியுடன் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் தற்போது பள்ளி, கல்லுாரியில் பயிலும் சிறுவர்களை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி அதிக பணம் தருவதாக கூறி விற்பனை யிலும் ஈடுபடுத்துகின்றனர்.இவர்களும் பள்ளி, கல்லுாரிக்கு கஞ்சா பொட்டலங்களை சாப்பாடு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸில் எடுத்துச்சென்று விற்பனையில் ஈடுபடு கின்றனர்.

மாணவர்கள் என்பதால் போலீசாரும் பிடித்து சோதனை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us