நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கோட்டையூர் அருகே சாக்குப் பையுடன் நின்ற அரியபந்தம்பட்டி நீலகண்ணனை 50, வேடசந்துார் போலீசார் பிடித்து விசாரித்தனர்.  பையை சோதனையிட்டபோது 1 கிலோ 950 கிராம்  கஞ்சா இருந்தது தெரிந்தது.
மேலும் விசாரித்த போது, விட்டல்நாயக்கன்பட்டி தனியார்  நுாற்பாலையில் பணிபுரியும் அசாம் மாநிலத்தை  சேர்ந்த யசோபந்த் சகோ  ஒரு வாரத்திற்கு முன்பு ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்ததாகவும்,  நாங்கள் இருவரும் சுய லாபம் கருதி விற்பதாகவும் கூறினார். நீலகண்ணனை கைது செய்த போலீசார்  கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.   யசோபந்த் சகோவை தேடி வருகின்றனர்.

