UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அரவிந்த் 32, சென்னையில் இருந்து போடிக்கு 42 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ்சை ஓட்டிச்சென்றார். நேற்று காலை வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்றபோது, சென்னை நுங்கம்பாக்கம் குணால் 35, தனது குடும்பத்தினருடன் மூனாறு சென்ற கார், பஸ்சை முந்திச்செல்ல முயன்றது.
பஸ்சின் மீது மோதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் குறுக்கே நின்றது. கார் டிரைவர் ராஜஸ்தான் மாநிலம் பாஸ்வா கேத்ராம் மீனா 32, காயமடைந்தார். வடமதுரை போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
