ADDED : மார் 21, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 29.
கார் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். நேற்று திருச்சியில் இருந்து காரில் திண்டுக்கல் வந்தார். காரை திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தியிருந்தார். திடீரென ரேடியேட்டரில் தீப்பிடித்து கார் பற்றி எரிந்தது. இதை கண்ட போலீசார் ,அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன் பகுதி தீயில் எரிந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.