/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
/
கொடைக்கானலில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
ADDED : ஆக 24, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் அப்பர்லேக் வியூ ரோட்டில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவை சேர்ந்த 4 பேர் நேற்று மாலை அப்பர் லேக் வியூ ரோட்டில் காரில் வந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஜனரஞ்சகமான ரோட்டில் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.
கொடைக்கானலில் மது போதையில் வருவோர், ராங்க் டிரைவிங் செய்யும் போக்கால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

