தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சரக்கு வாகனம் - தனியார் பள்ளி வேன் விபத்து

 சரக்கு வாகனம் - தனியார் பள்ளி வேன் விபத்து

 சரக்கு வாகனம் - தனியார் பள்ளி வேன் விபத்து


ADDED : ஜன 26, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி ஆயக்குடி பகுதியில் சரக்கு வாகனத்துடன் பள்ளி வேன் மோதிய விபத்தில், மாணவர்கள் மூவர் உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர்.

பழநி ஆயக்குடி பகுதியில் நேற்று மாலை தனியார் பள்ளி வேன் மாணவர்களுடன் சத்திரப்பட்டியை நோக்கிச் சென்றது.

அதே பாதையில் பாதயாத்திரை பக்தர்களின் சமையல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சரக்கு வாகனம் சென்றது.

இதில் திடீரென சரக்கு வாகனம் திரும்பியதில் பள்ளி வேன் சரக்கு வாகனத்தில் மோதியது. இதில் பள்ளி மாணவர்கள் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டது.

பள்ளி வேன் டிரைவர் முத்துச்சாமி 60, சரக்கு வாகனத்தில் சென்ற கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் 58, ஜெயக்கொடி 61, ஆகியோர் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

பழநி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us