ADDED : நவ 16, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: பொள்ளாச்சி ஜமீன் முத்தூரை சேர்ந்தவர், தனியார் பஸ் கண்டக்டர் முத்துக்குமார் 27. இவரது மாருதி காரை, பொள்ளாச்சியை சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம் அடமானம் வைத்து, திருப்பினார். ஆனால், காரை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கார் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விசாரணையில், திண்டுக்கல் மதுரை ரோட்டைச் சேர்ந்த தாரிக் அன்வர் மற்றும் ஆரிஸ் முகமது ஆகியோர் காரை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது.
முத்துக்குமார் புகாரின் பேரில், பார்த்திபன் உள்பட மூவர் மீது தாடிகொம்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

