தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கால்நடை வளர்ப்போர் தவிப்பு

கால்நடை வளர்ப்போர் தவிப்பு

கால்நடை வளர்ப்போர் தவிப்பு


UPDATED : ஆக 04, 2026 11:12 PM

ADDED : ஆக 04, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 11:12 PM ADDED : ஆக 04, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் கால்நடைகளை பராமரிக்க போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் பசுமாடுகளை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்று தங்களது அன்றாட செலவினங்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமல் போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டு போயின. போர்வெல்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்து போனது. இதனால் இப்பகுதியில் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கால்நடைகளை வளர்ப்பதற்கும் தேவையான தண்ணீர் இன்றி உள்ளது. மழை இல்லாமல் பசுந்தீவனங்கள் கிடைக்கவும் வழி இல்லாததால் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்று வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us