UPDATED : நவ 27, 2026 12:24 AM
ADDED : நவ 27, 2026 12:24 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ‘டேப்ஸ்’ திட்டம் ஒழிக்கப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்ற த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி விசில் ஊதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பிற ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்சக்கரவர்த்தி, ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.
அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
குஜிலியம்பாறை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலாஜிகேசவன் நன்றி தெரிவித்தார்.
