தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்


ADDED : பிப் 11, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சட்டசபை தேர்தலுக்கு பின் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்குவதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடக்காத பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2026 ஏப்ரலில் துவங்கி 2027 மார்ச்1க்குள் இப்பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்க உள்ளன.

முதற்கட்டமாக வீடுகளின் பட்டியல், வீடுகளில் உள்ள வசதிகளின் விபரங்களையும், இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடக்க உள்ளன.

'டிஜிட்டல்' பணிகள்: முதல் முறையாக டிஜிட்டல் முறை யில் தரவுகள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக அலைபேசி செயலிகள் உருவாக்கப்பட்டு ஒரு மேற்பார்வையாளர், 6 களப்பணியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வீட்டுவசதி கணக்கெடுப்பில் ஒரு குழு 400 வீடுகள் என்ற கணக்கில் தரவுகளை சேகரிக்க உள்ளனர்.

கணக்கெடுக்கும் பகுதியின் வரைபடங்களும் பதிவேற்றப்படுகின்றன. இத்தரவுகள் மக்கள் தொகை மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு https://cms.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மாவட்டந்தோறும் கணக்கெடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்கள் பணிநிலை அலுவலர்கள், துணை கண்காணிப்பு அலுவலர்களாகவும், தாசில்தார்கள் கண்காணிப்பு மேற்பார்வை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுய பதிவு, டிஜிட்டல் இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் முதன் முறையாக சுய பதிவு மூலம் பாலினம், வயது உட்பட 32 வினாக்களுக்கு பொதுமக்களே நேரடியாக விடையளிக்க வேண்டும்.

இது தொடர்பாக திண்டுக்கல்லில் நடந்த முதல் ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது:

சுயபதிவு முறையும், ஜாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளும் ஏற்படுத்தப்படும். சுயப்பதிவு செய்திருந்தாலும் கணக்கெடுப்பாளர் தரவுகளை பதிவு செய்ய வருவார்.

டிஜிட்டல் தரவுகள், வரைபடங்களாக பதிவேற்றப்படுவதால் மிகத்துல்லிய விபரங்கள் கிடைக்கும். பயிற்சிகள் துவங்கி உள்ளன. தேர்தலுக்கு பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us