/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்திய அரசு ஊரக நீர் மேலாண்மை திட்ட ஒதுக்கீடு நிதியில் முறைகேடு
/
மத்திய அரசு ஊரக நீர் மேலாண்மை திட்ட ஒதுக்கீடு நிதியில் முறைகேடு
மத்திய அரசு ஊரக நீர் மேலாண்மை திட்ட ஒதுக்கீடு நிதியில் முறைகேடு
மத்திய அரசு ஊரக நீர் மேலாண்மை திட்ட ஒதுக்கீடு நிதியில் முறைகேடு
ADDED : பிப் 11, 2025 05:40 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஊரக நீர் மேலாண்மை திட்ட ஒதுக்கீடு நிதியில் முறைகேடு நடைபெற்றதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆத்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியான ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசு ஒதுக்கிட்டு செய்த திட்ட பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
இதுவரை பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ஊரக வளர்ச்சி நிதியில் தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்ததாக கணக்கு காட்டி ரூ.பல லட்சம் மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு வந்த மத்திய குழுவினர் பெயரளவுக்கு மட்டும் விசாரணை செய்து அறிக்கை கொடுத்துள்ளனர்.
அந்த அறிக்கை தவறானது. மீண்டும் மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.