ADDED : பிப் 21, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரே திண்டுக்கல் ரோடு விரிவாக்கம் செய்த போது மின்கம்பத்தை அகற்றாமல் விட்டு விட்டனர்.
இதனால் மின்கம்பம் நடுரோட்டுக்கு வந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் இது தொடர்பான செய்தி நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து நேற்று மின்வாரியம் முன்னிலையில் பணியாளர்கள் மின்கம்பத்தை அகற்றி ரோட்டில் ஓரத்திற்கு கொண்டு சென்றனர். பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டதால் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

