ADDED : பிப் 19, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாநில கேலோ இந்தியா மகளிர் வூசு லீக் போட்டி கோவை ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் சார்பாக 16 வீராங்கனைகள் கலந்து கொண்டு 7 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். தவுலு பிரிவில் 53 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்ட அணியினருக்கு கோவை எஸ்.பி., பாலாஜி சரவணன் சுழற் கோப்பையை வழங்கினார்.
இவர்களை மாநில வூசு சங்க தலைவர் ஜான்சன், துணைத் தலைவர் ரவி,பொருளாளர்கோபி வாழ்த்தினர்.

