UPDATED : நவ 11, 2026 05:33 PM
ADDED : நவ 11, 2026 05:30 PM
வடமதுரை: மயிலாடுதுறை செங்கோட்டை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் நவ.,16 முதல் மாறுகிறது.
இந்த ரயில் தற்போது மயிலாடுதுறையில் மதியம் 12:35 மணிக்கு புறப்படுகிறது. ஒரு வழிப்பாதையான மயிலாடுதுறை தஞ்சாவூர் இடையே எதிரே வரும் இரு விரைவு ரயில்களுக்கு வழிவிடும் காரணத்தால் தாமதம் ஏற்படுகிறது. அதோடு மயிலாடுதுறையில் அடுத்த 15 நிமிடங்களில் சென்னை திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலும் தொடர்ந்து வருகிறது.
இதனால் நவ.,16 முதல் மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடங்கள் முன்கூட்டியே மதியம் 12:10 மணிக்கே புறப்படும் வகையில் நேரம் மாற்றப்படுகிறது. தஞ்சாவூரில் மதியம் 1.41 மணிக்கு பதிலாக 1.28 மணிக்கே புறப்படும். திருச்சியில் இருந்து செங்கோட்டை வரையிலான ஸ்டேஷன்களில் நேர மாற்றம் இல்லை.
